கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்

லக்னோ: கட்சி விரோத நடவடிக்கை காரணமாக, உத்தரபிரதேசத்தில் பூஜா பால் எம்எல்ஏ, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக, சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில், சமாஜ்வாதி எம்எல்ஏ வான பூஜா பால் பேசுகையில்,முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கொள்கைகள், பெண்களுக்கான நீதியை உறுதி செய்தல், தனது கணவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள அதிக் அகமது போன்ற குற்றவாளிகளுக்கு எதிராக, அவர் நீதி வழங்கியதற்காக, முதல்வர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என்றார்.

முதல்வரை பாராட்டி பேசிய சில மணி நேரங்களுக்கு பிறகு, பூஜா பால் மீது, கட்சி விரோத நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிடப்பட்டு, கட்சியை விட்டு நீக்கி உள்ளதாக, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று அறிவித்துள்ளார்.

Advertisement