டிரம்ப் - புடின் பேச்சு தோல்வியடைந்தால் இந்தியாவுக்கு கூடுதல் வரி: அமெரிக்கா

வாஷிங்டன்: அலாஸ்காவில் நடக்கும் டிரம்ப் - புடின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் இந்தியாவுக்கு கூடுதலாக மீண்டும் வரிவிதிக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்து உள்ளது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீ த வரி விதித்தது. மேலும், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி கூடுதலாக 25 சதவீத வரி விதிக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்தியா மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க இருநாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனிடையே, உக்ரைன் மீதான போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக அலாஸ்காவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் - ரஷ்ய அதிபர் புடின் இடையே ச்சுவார்த்தை நாளை நடைபெற உள்ளது. இது சர்வதேச அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், ரஷ்யா கடுமையான பின் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என டிரம்ப் எச்சரித்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்க கருவூலத்துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் கூறியதாவது: இந்தியா மீது வரி விதிக்கப்பட்டு உள்ளது. அலாஸ்காவில் நடக்கும் பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என்றார்.










மேலும்
-
கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்
-
போதைப்பொருள் பயன்பாடு, பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு: கவர்னர் ரவி குற்றச்சாட்டு
-
பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை
-
கட்சி விரோத நடவடிக்கை: உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி எம்எல்ஏ நீக்கம்
-
நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விவரங்களை வெளியிட வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
-
வங்கம் இல்லாமல் சுதந்திரம் இல்லை: மம்தா