கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்



ஈரோடு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமையாசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைத்து பள்ளிகளுக்கும் அடிப்படை பணியாளர்கள் மற்றும் அமைச்சு பணியாளர்களை நியமிக்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு பெறுவதில் உள்ள, முரண்பாடுகளை களைய வேண்டும்.


தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் நடந்தது.மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். மாநில பொருளாளர் திம்மராயன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தலைமை ஆசிரியைகள் சுகந்தி, தேன்மொழி, ராதிகா, கலை செல்வி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement