முதல்வர் மருந்தகங்களில் ஆய்வு ரூ.46.46 லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு, ஈரோடு, வில்லரசம்பட்டி 4 ரோடு, திண்டல்மலை நகர கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய இடங்களில் நடக்கும் முதல்வர் மருந்தகங்களை, கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார். மருந்து வாங்க வந்தவர்களிடம், பயன்பாடு குறித்து கேட்டறிந்தார்.ஈரோடு மாவட்டத்தில், 36 முதல்வர் மருந்தகங்கள் செயல்படுகிறது. 22 மருந்தகங்கள், கூட்டுறவு சங்கங்கள் மூலமும், 14 மருந்தகங்கள் தனியார் மூலமும் செயல்படுகிறது.


இங்கு ஜெனரிக் மருந்துகள், 20 சதவீதம் முதல், 90 சதவீதம் வரை தள்ளுபடி விலையிலும், பிற மருந்துகளுக்கு , 25 சதவீதம் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. 216 வகை மருந்துகள் கிடைக்கிறது. மாநில அளவில் தனியாக உள்ள சேமிப்பு கிடங்குகள் மூலம், 48 மணி நேரத்துக்குள் மருந்தகங்களுக்கு தேவையான மருந்துகள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த பிப்., 24ல் துவங்கி நேற்று முன்தினம் வரை, 46.46 லட்சம் ரூபாய் மதிப்பில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டுறவு சார் பதிவாளர் பாலாஜி உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement