மாநகராட்சி பகுதிகளில் கமிஷனர் ஆய்வு


ஈரோடு, ஈரோடு மாநகராட்சி, 31வது வார்டு பழையபாளையம் அருகில் உள்ள சண்முகவள்ளி நகரில், பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேக்கமடைவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட இடத்தை நேற்று கமிஷனர் அர்பித் ஜெயின் ஆய்வு செய்தார். பின், உடனடியாக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, அடைப்பு

கள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதேபோல், 49வது வார்டு ஓடைமேட்டில் கட்டப்பட்டு வரும் கழிவு நீரேற்று நிலையத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். குமலன் குட்டை மாநகராட்சி துவக்கப்பள்ளியில் சத்துணவு கூடம், 49வது வார்டு நல்லியம்பாளையம் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 31வது வார்டு செல்வம் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கூடுதல் கட்டடம் கட்டுமான பணிகள் என பல்வேறு இடங்களில் கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.
துணை கமிஷனர் தனலட்சுமி, மாநகர பொறியாளர் முருகேசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement