பாதுகாப்பு படையினர் அதிரடி : ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டவர் உள்ளிட்ட 2 நக்சல் சுட்டுக்கொலை

பிஜாப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் ரூ.26 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
சிஆர்பிஎப், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் அடங்கிய பாதுகாப்பு படையினர், நக்சல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில் அந்த அமைப்பின் முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால், நக்சல் அமைப்பினருக்கு பெரிய பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. தற்போது சத்தீஸ்கரின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். அவர்களையும் விரைவில் கட்டுப்படுத்த மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.
இந்நிலையில், இந்தோ திபெத்திய எல்லை பாதுகாப்பு படையினர், மாவட்ட ரிசர்வ் போலீசார், மாவட்ட போலீசார் இணைந்து மன்புர்-மொஹ்லா-அம்பாகர்கி சவுகி மாவட்டத்தில் உள்ள மதன்வாடா வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் நக்சல்களுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடந்தது.
இதில் ரூ.1 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட நக்சல் மூத்த நிர்வாகியான விஜய் ரெட்டி மற்றும் ரூ.26 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்ட லோகேஷ் சலாமே ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது அந்த அமைப்பினருக்கு பெருத்த பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்
-
வெண்டிலேட்டரில் இருக்கிறது திமுக ஆட்சி: இபிஎஸ் கிண்டல்
-
டில்லியில் கொட்டியது கனமழை; சுவர் இடிந்து 2 சிறுவர்கள் பலி; மரம் விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு
-
இந்திய பொருட்களை வாங்குவோம்; பயன்படுத்துவோம்: ஜனாதிபதி அழைப்பு
-
பெட்ரோலில் எத்தனால் கலப்பு; மனித குலத்துக்கு கிடைத்த மகத்தான வாய்ப்பு!
-
ஆசிரியர் தகுதி தேர்வு தேதி மாற்றம்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
-
பாதுகாப்பு படையினருக்கான வீர தீர விருதுகள் அறிவிப்பு