டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் பிரதமர் மோடி

புதுடில்லி: நாட்டின் 79வது சுதந்திர தினத்தை யொட்டி, டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார்.
நாடு முழுவதும் இன்று (ஆக., 15) 79வது சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி இன்று காலை பிரதமர் மோடி டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். இதன் வாயிலாக, பிரதமராக மோடி 12வது முறையாக தேசியக்கொடி ஏற்றிய பெருமையை பெற்றார். முன்னதாக, அவர் முப்படைகளின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
முன்னதாக, பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த சுதந்திர தின வாழ்த்துக்கள். இந்த மங்களகரமான தருணம் அனைத்து நாட்டு மக்களின் வாழ்க்கையிலும் புதிய உற்சாகத்தையும் புதிய வீரியத்தையும் கொண்டு வரட்டும்.
இதனால் வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது புதிய உத்வேகத்தைப் பெறட்டும். ஜெய் ஹிந்த். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
@block_P@
முன்னதாக, டில்லி ராஜ்கோட்டில் காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.block_P

மேலும்
-
'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம்; கலெக்டர்களுக்கு முதல்வர் அறிவுரை
-
சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அழைப்பு
-
தியாகிகளின் குடும்ப ஓய்வூதியம் ரூ.12 ஆயிரமாக உயர்வு; சுதந்திர தினத்தில் ஸ்டாலின் அறிவிப்பு
-
தீபாவளியன்று மக்களுக்கு மிகப்பெரிய பரிசு: பிரதமர் மோடி அறிவிப்பு
-
போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா தயார்; புடின் உடன் சந்திப்புக்கு முன் டிரம்ப் பேட்டி
-
அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா அஞ்சாது: சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேச்சு