சிறுவர்களை பெரிதும் கவர்ந்துவரும் காற்றாடி திருவிழா


தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை (சென்னை-மாமல்லபுரம் செல்லும் வழியில்) கடற்கரையில் சர்வதேச காற்றாடி திருவிழா நடைபெற்று வருகிறது.
Latest Tamil News
இந்தியா, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த காற்றாடி கலைஞர்கள் 450-க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்கவிட்டுள்ளனர்.
Latest Tamil News
பட்டம் என்று நாம் அழைக்கும் இந்த காற்றாடி வழக்கமாக சதுரவடிவில் இருக்கும். ஆனால், இந்த திருவிழாவில் பறக்கும் காற்றாடிகள் அனைத்தும் வித்தியாசமாக இருக்கின்றன. பெரும்பாலான காற்றாடிகள் குழந்தைகள் விரும்பும் கார்ட்டூன் கதாபாத்திரங்களின் வடிவில் அமைந்துள்ளன.
Latest Tamil News
திருவிழா நடைபெறும் இடத்திற்கு எதிரிலுள்ள பெரிய மைதானத்தில் பார்வையாளர்கள் கார் உள்ளிட்ட வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் விதவிதமான காற்றாடிகளை அருகிலிருந்து காணலாம். ஆனால் பெரும்பாலான காற்றாடிகள் தொட்டுப் பார்க்க முடியாத உயரத்தில் பறக்கின்றன. அருகிலேயே பறந்தாலும் அவற்றைத் தொட அனுமதி இல்லை; காரணம், அந்த காற்றாடிகளின் உயர்ந்த விலை.
Latest Tamil News
வரும் 17 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த காற்றாடி திருவிழாவிற்கு நுழைவுக் கட்டணம் உண்டு. 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு இலவச அனுமதி. மாலை 3 மணி முதல் இரவு வரை காற்றாடிகளைப் பார்வையிடலாம். குறிப்பாக இரவு நேரத்தில் சில காற்றாடிகள் வெளிச்சம் உமிழ்ந்தபடி பறப்பது தனித்துவமான அனுபவமாகும்.
Latest Tamil News
படங்கள்: சுரேஷ் கண்ணன்
எழுத்து: எல். முருகராஜ்

Advertisement