சிறப்பான ஆட்சியை மோடி கொடுத்து வருகிறார்

@quote@ தே.மு.தி.க., தொண்டர்கள் விரும்பும் மெகா கூட்டணி கண்டிப்பாக அமையும். தே.மு.தி.க., இடம்பெறும் கூட்டணியே சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். தி.மு.க., ஆட்சியில், 50 சதவீத நன்மைகளும், 50 சதவீத தீமைகளும் நடந்துள்ளன.

எனவே, தி.மு.க., அரசுக்கு, நுாற்றுக்கு 50 மதிப்பெண் தான் தர முடியும். தமிழக அரசு, துாய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் பிரச்னையை தீர்க்காமல், நள்ளிரவில் கைது செய்தது சரியல்ல. மத்தியில், பிரதமர் மோடி, மிகச் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுத்து வருகிறார். வெளிநாடுகளில் மோடிக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது. அமெரிக்கா மட்டுமல்ல, எந்த நாடும், எந்த வகையிலும் இந்தியாவை மிரட்ட முடியாது. இந்தியா தனித்துவத்துடன் வேகமாக வளர்ந்து வருகிறது. - -பிரேமலதா பொதுச்செயலர், தே.மு.தி.க.,quote

Advertisement