த.வெ.க., மாநாட்டில் பங்கேற்போர் முதலுதவிக்கு ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பிதழ்
மதுரை: மதுரையில் தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலர் ஆனந்த், ஆக., 21ல் நடக்கும் கட்சியின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கு தாம்பூலம் வழங்கி அழைப்பு விடுத்தார்.
மாநாட்டு பணிகளுக்காக மதுரையில் முகாமிட்டுள்ள ஆனந்த், மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு நேற்று காலை வந்தார்.
அங்கு, ஒவ்வொரு வியாபாரிக்கும் அன்னாசி, ஆப்பிள், மாதுளம், இரு வாழைப்பழங்கள் கொண்ட தாம்பூல தட்டு மற்றும் மாநாட்டிற்கான அழைப்பிதழை கொடுத்து, 'மாநாட்டிற்கு கட்டாயம் வரணும்' என கேட்டுக் கொண்டார்.
மாநாட்டில் நிறைய எண்ணிக்கையில் மக்கள் கூடுவர் என்பதால், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, மாநாட்டு வளாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால், அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்க, 'ட்ரோன்' வாயிலாக மருத்துவ, 'கிட்' கொண்டு செல்ல சோதனை ஓட்டம் நேற்று நடந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு; வானிலை மையம் தகவல்
-
பட்டியலின மக்களுக்கு துரோகம் இழைக்கிறார்; திருமா மீது எல்.முருகன் பாய்ச்சல்
-
மகளை திருமணம் செய்ததால் ஆத்திரம்: காரில் மோதி மருமகனை கொன்ற மாமனார்; மதுரையில் அதிர்ச்சி
-
4 ஆண்டுகளில் ஈர்த்த முதலீடு ரூ.10 லட்சம் கோடி: முதல்வர் ஸ்டாலின்
-
ஜம்மு காஷ்மீரில் இன்று மீண்டும் மேக வெடிப்பு; 4 பேர் பலி; 6 பேர் காயம்
-
மியான்மரில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 21 பேர் பலி
Advertisement
Advertisement