வாக்காளர் பட்டியல் விவகாரம்: நாளை பத்திரிகையாளர்களை சந்திக்கும் தேர்தல் கமிஷனர்கள்

10


புதுடில்லி: தேர்தல் கமிஷன் சார்பில் நாளை பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது காங்கிரஸ் எம்பி ராகுலின் குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கப்படும்
.

கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டுகள் திருடப்பட்டதாகவும், இதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'ஓட்டு திருட்டு' என்ற பெயரில் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டி வருகிறார். மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநில தேர்தல் முடிவுகள் குறித்தும் ராகுல் குற்றம்சாட்டி வருகிறார்.


இதை மறுத்த தேர்தல் கமிஷன், 'குற்றச்சாட்டுகள் மீது நம்பிக்கை இருந்தால் பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்; விசாரிக்கிறோம். இல்லை எனில் மன்னிப்புக் கேளுங்கள் என, ராகுலுக்கு பதிலடி கொடுத்தது. எனினும் அவர் கையெழுத்திட மறுக்கிறார். ராகுல் மீதும் பாஜ தலைவர்கள் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், டில்லியில் உள்ள தேசிய மீடியா சென்டரில் நாளை பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் கமிஷன் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்துள்ளது. இதில், ராகுல் தெரிவித்த குற்றச்சாட்டுகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் பீஹாரில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்புப் பணிகளுக்கு பிறகு முதல்முறையாக தேர்தல் கமிஷன் சார்பில் முதல்முறையாக பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ உள்ளது. பீஹாரில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், நடந்த வாக்காளர் திருத்தப் பட்டியல் திருத்த சிறப்புப் பணிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் எதிர்ப்பை கிளப்பின. இதனை வைத்து பார்லிமென்டிலும் அமளி உண்டாகி உள்ளது.

இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் , வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு பிறப்பித்து இருந்தது.

Advertisement