உதவி தேடிய பாலஸ்தீனியர்கள் 1760 பேர் கொல்லப்பட்டனர்: ஐநா அறிக்கை

நியூயார்க்: மே மாதத்திலிருந்து காசாவில் உதவி தேடிய 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டனர் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ள காசா மீது 2023ல் போர் துவங்கியது. காசாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, உள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களில் 61,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சமீபத்தில், இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பிரபல நிருபர் அனஸ் அல்-ஷெரிப் உட்பட ஐந்து அல் ஜசீரா பத்திரிகையாளர்கள் கொல்லப் பட்டனர். இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மே மாதத்திலிருந்து காசாவில் உதவி தேடிய 1,760 பாலஸ்தீனியர்கள் கொல்லப் பட்டனர்.
பெரும்பாலானோர் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டனர். 994 பேர் காசா மனிதாபிமான அறக்கட்டளை தளங்களுக்கு அருகிலும், 766 பேர் விநியோக வாகனங்களின் பாதைகளிலும் கொல்லப்பட்டனர்.
கடந்த 15 நாட்களில் 387 பேர் உதவிக்காக காத்திருந்தபோது கொல்லப்பட்டுள்ளனர். நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலிய பீரங்கி தாக்குதலில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டனர். இதில் உதவிக்காக காத்திருந்த 12 பேர் அடங்குவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும்
-
போராட்டத்திலும் கோஷ்டி கானம்!
-
சுற்றுலா ரயிலில் சிலிண்டர் கொண்டு வந்தவர் கைது
-
த.வெ.க., மாநாட்டில் முதலுதவி அளிக்க ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் தட்டு
-
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
டாக்டரை கேளுங்கள்
-
பனையூரில் பதுங்கும் விஜய் திக்கு தெரியாத திருமாவளவன் செல்லுார் ராஜூ கலாய்க்கிறார்