த.வெ.க., மாநாட்டில் முதலுதவி அளிக்க ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் தட்டு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி காய்கறி, பழம், பூ மார்க்கெட் வியாபாரிகளை சந்தித்த த.வெ.க., பொதுச் செயலாளர் ஆனந்த், ஆக.21ல்நடக்கும் கட்சியின் 2வது மாநில மாநாட்டு அழைப்பு விடுத்தார்.

மாநாட்டு பணிகளுக்காக மதுரையில் முகாமிட்டுள்ள ஆனந்த், நேற்று காலை மாட்டுத்தாவணி காய்கறி சந்தைக்கு வந்தவர் முன்னதாக ஆட்டோபிரசாரத்தை துவக்கினார்.

பின்னர் ஒவ்வொரு வியாபாரிக்கும் அன்னாசி, ஆப்பிள், மாதுளம், இரு வாழைப்பழங்கள் கொண்ட தாம்பூல தட்டு மற்றும் மாநாட்டிற்கான அழைப்பிதழை தந்து 'மாநாட்டிற்கு நிச்சயம் வரணும்' என்றார்.

ட்ரோனில் மருத்துவ கிட் மாநாட்டில் ஒன்றரை லட்சம் பேர் கூடுவார்கள் என்பதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக மாநாடு வளாகத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அந்த இடத்திலேயே முதலுதவி அளிக்க ட்ரோன் மூலம் மருத்துவ 'கிட்' கொண்டு வருவதற்கான சோதனை ஓட்டம் நடந்தது.

Advertisement