சுற்றுலா ரயிலில் சிலிண்டர் கொண்டு வந்தவர் கைது

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஆர்.பி.எப்., இன்ஸ்பெக்டர்கள் சாபு ஜேக்கப், அஜித்குமார், குற்றப் புலனாய்வுப்பிரிவு இன்ஸ்பெக்டர் நிஷாந்த் உள்ளிட்ட போலீசார், பிட் லைன் உள்ளிட்ட இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

'பாரத் கவுரவ்' சிறப்பு ரயில் பெட்டி ஒன்றில் 3 வணிக காஸ் சிலிண்டர்கள் சாக்குப்பையால் மூடப்பட்டிருந்ததை கண்டனர். இரு அடுப்புகள், இரு பர்னர்கள், எரிவாயு குழாய்களும் இருந்தன. விசாரணையில் சுற்றுலாப்பயணிகளை அழைத்து வந்த மும்பை ஹிதேஷ் ராம்ஜி தேவலியா 47, சமையல் பயன்பாட்டிற்காக சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரிந்தது.

திருப்பரங்குன்றம் ஸ்டேஷனில் சுற்றுலா ரயில் ஒன்றில் இருந்த அவரை கைது செய்தனர். 2023ல் மதுரை யார்டில் நின்ற ரயிலில், பயணிகள் கவனக்குறைவாக சிலிண்டரை கையாண்டதில் காஸ் கசிந்து தீ விபத்து ஏற்பட்டதில் 12 பேர் உடல் கருகி இறந்தனர்.

Advertisement