இந்தியாவுக்கு கூடுதல் வரியா? டிரம்ப் நிலையில் மாற்றம்

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து தற்போது பரிசீலனை செய்யப்போவதில்லை எனவும், 2- 3 வாரங்களுக்கு பிறகு முடிவு செய்யப்படும் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்தியா மீது 25 சதவீத வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி அபராதமாக மற்றொரு 25 சதவீத வரி விதிப்பதாக அறிவித்து இருந்தார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது. இதனை ஏற்க முடியாது எனத் தெரிவித்து இருந்தது. ரஷ்யாவிடம் தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இதனை நிறுத்தியதாக தெரியவில்லை.
இதன் பிறகும், உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ரஷ்யா அதிபர் புடினுடன் டிரம்ப் நடத்தும் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாவிட்டால் கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்கா கூறியிருந்தது.
இந்நிலையில் நேற்று (ஆக.,16) அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் புடினை, அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசினார். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. அதேநேரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என இரு நாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.
இதன் பிறகு அமெரிக்கா மீடியாவுக்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியதாவது: அலாஸ்காவில் நடந்த சந்திப்பு நன்றாக இருந்தது. இதற்கு 10க்கு 10 மதிப்பெண் வழங்கலாம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது கூடுத் வரி விதிப்பது தொடர்பாக, உடனடியாக எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை. இரண்டு அல்லது மூன்று வாரத்தில் முடிவெடுக்க வாய்ப்பு உள்ளது. தற்போது கூடுதல் வரி விதிக்கப்பட்டால், அது அவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும். அமெரிக்கா விதித்த வரி விதிப்பு காரணமாக ரஷ்யாவிடம் இந்தியா கச்சா எண்ணெய்வாங்குவதை நிறுத்திவிட்டது. இவ்வாறு அவர் கூறினார்.













மேலும்
-
போராட்டத்திலும் கோஷ்டி கானம்!
-
சுற்றுலா ரயிலில் சிலிண்டர் கொண்டு வந்தவர் கைது
-
த.வெ.க., மாநாட்டில் முதலுதவி அளிக்க ட்ரோனில் மருத்துவ 'கிட்' வியாபாரிகளுக்கு தாம்பூலம் தட்டு
-
பரமக்குடி அருகே கலையூரில் அகழாய்வு உயர்நீதிமன்றத்தில் தகவல்
-
டாக்டரை கேளுங்கள்
-
பனையூரில் பதுங்கும் விஜய் திக்கு தெரியாத திருமாவளவன் செல்லுார் ராஜூ கலாய்க்கிறார்