ஹிமாச்சலை புரட்டியெடுக்கும் கனமழை; இதுவரை 257 பேர் பலி

7


சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை மற்றும் அதனை சார்ந்த விபத்துகளில் சிக்கி இதுவரை 257 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, 374 சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 524 டிரான்ஸ்பார்மர்களும், 145 தண்ணீர் விநியோக திட்டங்களும் முடங்கியுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக, மண்டி, குலு மற்றும் கின்னார் மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மறுசீரமைப்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூன் 20ம் தேதி பருவமழை தொடங்கியது முதற்கொண்டு கனமழை, நிலச்சரிவு உள்ளிட்ட மழை சார்ந்த சம்பவங்களில் சிக்கி 133 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மழையில் ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 124 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 257 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பல லட்சம் மதிப்பில் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

வரும் காலங்களில் சீரான இடைவெளியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், மலைப்பாதைகளில் பயணிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement