'பெர்ட்ரம்' டென்னிஸ் போட்டி கோவை பி.எஸ்.ஜி., அணி வெற்றி

சென்னை: 'பெர்ட்ரம்' கோப்பைக்கான டென்னிஸ் போட்டியில், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்தது.
லயோலா கல்லுாரி யின் நிறுவனர், 'பெர்ட்ரம்' நினைவு கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், 91வது ஆண்டாக, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
கல்லுாரிகளுக்கான டென்னிஸ் போட்டியில், 12 அணிகள் மோதின. இறுதிப் போட்டி, நேற்று காலை நடந்தது.
அதில், கோவை பி.எஸ்.ஜி., கல்லுாரி மற்றும் லயோலா ஒயிட்ஸ் அணிகள் மோதின.
முதலில் தனிநபர் ஆட்டத்தில், பி.எஸ்.ஜி., வீரர் கவின், 6 - 3, 6 - 2 என்ற கணக்கில் லயோலாவின் ஹேமச்சந்திரனை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இரட்டையருக்கான ஆட்டத்தில், பி.எஸ்.ஜி., வீரர் ரக் ஷக் - கவன் ஜோடி, 6 - 2, 6 - 3 என்ற கணக்கில், லயோலாவின் ராகுல் - ஹேமச்சந்திரன் ஜோடியை வீழ்த்தி, முதலிடத்தை பிடித்தது. மற்ற போட்டிகள் தொடர்கின்றன.
மேலும்
-
சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா
-
தமிழகம் 'திரில்' வெற்றி * மும்பை அணியை வீழ்த்தியது
-
செஸ்: குகேஷ் கலக்கல்
-
ஏஐ மூலம் மக்களை ஏமாற்ற முடியாது: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு
-
தமிழகத்தில் நேர்மையான அதிகாரிக்கு கிடைக்கும் பரிசு; பெண் விஏஓ மீதான தாக்குதலுக்கு அண்ணாமலை கண்டனம்
-
கவர்னர் என்பவர் மத்திய அரசின் பிரதிநிதி; வெறும் தபால்காரர் அல்ல: மத்திய அரசு வாதம்!