ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்

புதுடில்லி: பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. அவை தொடங்கிய முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று காலை 11 மணிக்கு லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால் லோக்சபா பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பிறகு 12 மணிக்கு அவை கூடியதும், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக, லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளிக்கு மத்தியில், ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதா சட்ட ஒப்புதல் பெற்றால், ஆன்லைன் பெட்டிங் கேம் சேவைகளை வழங்கினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும். e-Sports விளையாட்டுகளில், வெறும் பரிசு மற்றும் டிராபி ஆகியவற்றை மட்டுமே வழங்க வேண்டும்.
எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியபடி இருந்ததால், மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மசோதாவை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகள் மசோதாவை எதிர்ப்பது குறித்து தனது கருத்துக்களை தெரிவிக்குமாறு, அஸ்வினி வைஷ்ணவ் மணீஷ் திவாரியிடம் கேட்டுக் கொண்டார்.
இருப்பினும், பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முதலில் விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். பார்லி விவகார துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, பள்ளி மாணவர்கள் போல் சபையில் நடந்து கொள்வதாக, எதிர்க்கட்சியினரை கடுமையாக சாடினார். எதிர்க்கட்சிகளின் அமளி தொடர்ந்ததால், அவைக்கு தலைமை தாங்கிய பி.சி. மோகன், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்தார். பின்னர், அவை மீண்டும் கூடியதும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, நாளை (ஆக.,21) காலை 11 மணி லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.
மசோதா நகல்கள் கிழிப்பு
30 நாட்கள் சிறையில் இருந்தால் பதவி பறிக்கப்படும் என்ற மசோதாவை லோக்சபாவில் அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்ததும், அதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். ஒரு சிலர் மசோதா நகல்களை கிழித்து எறிந்து கூச்சல் போட்டனர்.




மேலும்
-
அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி!
-
சிறை செல்லும் முதல்வர்களை பதவி நீக்க புதிய சட்டம்; நல்லது என்கிறார் பிரசாந்த் கிஷோர்!
-
சிறையில் இருந்து அரசை நடத்துவது சரியானதா என்பதை மக்கள் முடிவு செய்யட்டும்: அமித் ஷா
-
தமிழகம் 'திரில்' வெற்றி * மும்பை அணியை வீழ்த்தியது
-
செஸ்: குகேஷ் கலக்கல்
-
ஏஐ மூலம் மக்களை ஏமாற்ற முடியாது: தமிழக அரசு மீது நயினார் குற்றச்சாட்டு