தாயிடம் ஆசி பெற்றார் முதல்வர் ஸ்டாலின்; நெகிழ்ச்சி பதிவு

4


சென்னை: 50வது திருமண நாளை முன்னிட்டு தனது தாய் தயாளு அம்மாளிடம் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அரைநூற்றாண்டாக என் வாழ்வின் துணையாக, என்னில் பாதியாக துர்கா நுழைந்து, தன்னுடைய அன்பால் மணவாழ்வை மனநிறைவான வாழ்க்கையாக அளித்துள்ளார்.

அவர் மீதான அளவற்ற அன்பே என் நன்றி. எதிர்பார்ப்புகளற்ற அன்பும் விட்டுக் கொடுத்தலும் இல்வாழ்வை நல்வாழ்வாக்கும் என இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்கிறோம். வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட விழைகிறோம். இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement