வீடு புகுந்து நாய் கடித்ததில் குழந்தை, பாட்டி படுகாயம்

3

கூத்தாநல்லுார்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லுார் அருகே,மேல்கொண்டாளியைச் சேர்ந்தவர், அபுதாகிர், 40. வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவரது மனைவி சுல்தான் பீவி, 20. இவர்களுக்கு, 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.


இவர்களுடன், குழந்தையின் தாய்வழி பாட்டி மல்லிகா பீவி, 55, என்பவரும் வசிக்கிறார்.


நேற்று, தொட்டிலில் குழந்தை துாங்கி கொண்டிருந்தது. மல்லிகா பீவி, கொல்லைபுறம் இருந்தார். அப்போது, வீட்டிற்குள் புகுந்த தெருநாய், துாங்கி கொண்டு இருந்த குழந்தையை கவ்வி இழுத்து சென்று கடித்து குதறியது.




குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு, மல்லிகா பீவி ஓடி வந்து, நாயை விரட்டினார்; அவரையும் நாய் கடித்தது.



அக்கம் பக்கத்தினர், நாயை விரட்டி விட்டு, குழந்தை மற்றும் பாட்டியை மீட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisement