3 பேருக்கு எஸ்.பி.,யாக பதவி உயர்வு

புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் அடாக் அடிப்படையில் மூன்று பேருக்கு எஸ்.பி.,க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் சி.டி.சி., எனும் பொறுப்பு அடிப்படையில் எஸ்.பி.,க்களாக பதவியேற்று பணியாற்றி வரும் கடலோர பாதுகாப்பு பிரிவு பழனிவேல், புதுச்சேரி பல்கலைக்கழக சிறப்பு பணி அதிகாரி முருகையன் ஆகியோருக்கு அடாக் அடிப்படையில் எஸ்.பி.,களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், சிறப்பு அதிரடி படை பிரிவில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர் வரதராஜனுக்கு அடாக் அடிப்படையில் எஸ்.பி.,யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சி.டி.சி., எனும் பொறுப்பு அடிப்படையில் மேல் பதவியில் பணி புரிந்தாலும், அந்த பணிக்காலம் கணக்கில் எடுத்து கொள்ளப்படாது.

இதன் காரணமாகவே அடாக் எனும் தற்காலிக அடிப்படையில் எஸ்.பி.,களாக நேரடியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கான உத்தரவை கவர்னர் அறிவுறுத்தலின் பேரில், தலைமை செயலர் சரத் சவுகான் வெளியிட்டுள்ளார்.

Advertisement