டில்லியில் பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்: இன்றும் 5 பள்ளிகளில் சோதனை

3


புதுடில்லி: டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பள்ளியில் போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது.


டில்லியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. டில்லியில் உள்ள 5 பள்ளிகளுக்கு இன்று (ஆகஸ்ட் 21) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

மிரட்டல் வந்த அனைத்து பள்ளிகளில் இருந்தும் மாணவ - மாணவியர் வெளியேற்றப்பட்டனர். அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் பதற்றம் உருவானது. பெற்றோர் அலறி அடித்துக் கொண்டு, பள்ளிகளை நோக்கி ஓடினர்.



அனைத்து பள்ளிகளுக்கும் தீயணைப்பு படையினர், வெடிகுண்டு செயலிழப்பு படையினர், போலீசார் விரைந்தனர். தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. பள்ளியின் ஒவ்வொரு அங்குலமும் சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகப்படும்படியான எந்த பொருளும் கைப்பற்றப்படவில்லை.போலீசார் சோதனை நடத்தியதில் புரளி என்பது உறுதியானது.


நேற்று 50க்கும் அதிகமான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement