கல்லுாரியில் கலைத் திருவிழா

திருமங்கலம்:திருமங்கலம் பி.கே.என்., கலை அறிவியல் கல்லுாரியில் 'டெக்வைப்- 25' என்ற பெயரில் கல்லுாரிகளுக்கு இடையிலான கலைத் திருவிழா நடந்தது. கல்லுாரி கமிட்டி தலைவர் தினேஷ் தலைமை வகித்தார்.

பி.கே.என்., வித்யாசாலா சங்கம் கமிட்டி தலைவர் சக்கரவர்த்தி, பொருளாளர் ஜெயபாண்டியன், செயலாளர் செல்வம், கல்லுாரி பொருளாளர் மணிசங்கர் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் கணேசன் வரவேற்றார். மாணவர்களுக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடந்தன.

ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷினி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். பேச்சாளர் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிவகாசி எஸ்.எப்.ஆர்., கல்லுாரி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது. திண்டுக்கல் என்.பி.ஆர்., கல்லுாரி 2ம் இடம் பெற்றது. கல்லுாரி நிர்வாகிகள் பரிசு வழங்கினர். கணினி அறிவியல் துறை தலைவர் இசக்கிராஜன் நன்றி கூறினார்.

Advertisement