கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

டேராடூன்: உத்தராகண்டில், கன்னத்தில் அறைந்த ஆசிரியரை பழிவாங்குவதற்காக அவரை துப்பாக்கியால் சுட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
உத்தராகண்டின் உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள காசிபூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, ஏராளமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
சிகிச்சை
இந்த பள்ளியில் இயற்பியல் பாட ஆசிரியராக ககன்தீப் சிங் கோலி பணியாற்றி வருகிறார்.
சமீபத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திய போது, பாடத்தை ஒழுங்காக கவனிக்காத சமரத் பஜ்வா என்ற மாணவரை ககன்தீப் கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது.
இரு தினங்களுக்கு பின், நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு வந்த ககன்தீப், வழக்கம்போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தினார்.
உணவு இடைவேளைக்கு வகுப்பில் இருந்து புறப்பட்ட போது, தன் டிபன் பாக்சில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ககன்தீப்பை நோக்கி மாணவர் சமரத் பஜ்வா சுட்டார். இதில், கழுத்தில் குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே ஆசிரியர் சுருண்டு விழுந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கழுத்தில் இருந்த குண்டு எடுக்கப்பட்டது. இருப்பினும், தீவிர சிகிச்சை பிரிவில் ககன்தீப் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்ப முயன்ற மாணவர் சமரத்தை, ஆசிரியர்கள் மற்றும் பிற மாணவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கைது
விசாரணையில், 'பிற மாணவர்கள் முன் கன்னத்தில் அறைந்ததால், வீட்டில் இருந்து துப்பாக்கியை எடுத்து வந்து ஆசிரியர் ககன்தீப்பை சுட்டேன்' என, மாணவன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.
பின், சமரத்தை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர். அவனின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில ஆண்டுகளுக்கு முன், சாலை விபத்து தொடர்பான வழக்கில் மாணவனின் தந்தை மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது.



மேலும்
-
யூரியாவுடன் ரூ.700க்கு இணை இடுபொருட்கள்: அமைச்சர் உத்தரவை மீறி கடைகளில் நிர்பந்தம்
-
வட்டி தள்ளுபடி காலம் நிர்ணயம்; வீட்டுவசதி வாரியம் விளக்கம்
-
கைவிடப்பட்ட கனிம குவாரிகள் அடையாளம் காணும் பணி தீவிரம்
-
சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடல் மதுரை வந்தது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு; ஒரு சவரன் ரூ.73,720!