இரண்டாவது மாநாட்டிலும் நாற்காலிகள் சேதம்
மதுரை: மதுரையில் நேற்று நடந்த த.வெ.க., 2வது மாநில மாநாட்டிலும் கட்சித் தலைவர் விஜயின் தொண்டர்கள், நாற்காலிகளை உடைத்து நொறுக்கினர்.
காலை முதலே குவிந்திருந்த தொண்டர்கள் விஜய் மேடை ஏறியதும் அங்கு போடப்பட்டிருந்த பிளாஸ்டிக் சேர்கள், தடுப்பு கம்பிகள், ஒலிபெருக்கி கட்டப்பட்டிருந்த இரும்புக் கம்பிகளின் மீது ஏறி நின்றனர். விஜய் 'ராம்ப் வாக்' சென்று மீண்டும் மேடைக்கு திரும்பியவுடன், வெளியே காத்திருந்த பல்லாயிரக்கணக்கானோர், விஜய் பேசுவதற்கு முன்பாகவே புறப்பட்டு சென்றனர். மாநாடு முடிந்த பின் பல ஆயிரம் பிளாஸ்டிக் சேர்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததை ஒப்பந்ததாரர்கள் வேதனையுடன் பார்வையிட்டனர். மாநாட்டுக்காக 2 லட்சம் பிளாஸ்டிக் சேர்கள் கொண்டு வர, மதுரையில் ஐந்து ஒப்பந்ததாரர்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட்டது. 2 நாட்களுக்கு முன், நான்கு ஒப்பந்ததாரர்கள் சேர்களை தர மறுத்ததால் கேரளாவிலிருந்து அவசரமாக சேர்கள் கொண்டு வரப்பட்டன. இந்நிலையில் மாநாட்டின் போது தொண்டர்கள் சேர்களின் மீது ஏறி இறங்கி துவம்சம் செய்ததில் சேர்கள் உடைந்தன. மேலும் கூட்ட நெரிசலில் சேர்களை ஒன்றோடு ஒன்று தள்ளிவிட்டு சென்றதால் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சேர்கள் உடைந்து நொறுங்கின. விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டிலும் இதே போன்று அதிக அளவில் சேதம் ஏற்பட்டது. இந்த மாநாட்டிலும் சேதம் அதிகரித்துள்ளது.
மேலும்
-
யூரியாவுடன் ரூ.700க்கு இணை இடுபொருட்கள்: அமைச்சர் உத்தரவை மீறி கடைகளில் நிர்பந்தம்
-
வட்டி தள்ளுபடி காலம் நிர்ணயம்; வீட்டுவசதி வாரியம் விளக்கம்
-
கைவிடப்பட்ட கனிம குவாரிகள் அடையாளம் காணும் பணி தீவிரம்
-
சென்னை வெறும் ஊரல்ல; தமிழகத்தின் இதயத்துடிப்பு என்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சவூதி அரேபியாவில் இறந்த தமிழரின் உடல் மதுரை வந்தது
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 சரிவு; ஒரு சவரன் ரூ.73,720!