விழிப்புணர்வு கூட்டம்

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷன் யாத்ரி நிவாஸில், ரயில்வே பாதுகாப்பு படையின் (ஆர்.பி.எப்.,) நுண்ணறிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் பிரிவு சார்பில், திருநங்கைகளுக்கான சமூக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

ஸ்டேஷன், ரயில்களில் பயணிகளிடம் திருநங்கைகள் யாசகம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. அவர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள், தன்னார்வ அமைப்புகள் மூலம் செயல்படுத்தப்படும் சமூக நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

விருப்பமுள்ள திருநங்கைகளுக்கு, ரயில்வே ஒப்பந்த பணிகளை ஏற்பாடு செய்வதாக ஆர்.பி.எப்., சார்பில் கூறப்பட்டது.

Advertisement