'நடுங்குது' நரியம்பட்டி

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நரியம்பட்டியில் மின்னழுத்த பற்றாக்குறையை சரி செய்ய வேண்டுமென அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

பூமிநாதன்: இங்கு ஏராளமான விவசாய நிலங்களில் மின்மோட்டார்கள் பயன்படுத்தப்படுகின்றன.ஒரு டிரான்ஸ்பார்மர் மூலம் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படுகிறது. மின்னழுத்த பற்றாக்குறை ஏற்பட்டு மின்விசிறி, விளக்குகள் சரியாக செயல்படுவதில்லை. அடிக்கடி மின் துண்டிப்பும் ஏற்படுகிறது. பலமுறை அதிகாரியிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றார்.

Advertisement