சாலை பணி துவக்கம்

பாகூர்: பின்னாட்சிக்குப்பத்தில் ரூ.16.99 லட்சம் மதிப்பில் சாலை பணியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

பாகூர் கொம்யூன் சார்பில் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில், ஏம்பலம் தொகுதி பின்னாட்சிக்குப்பம் சிவஹரி நகர், சிவஹரி அவென்யூ, இந்திரா நகர் மற்றும் ஜி.எச். நகரில் சாலை அமைக்க ரூ.16.99 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனையொட்டி சாலை அமைக்கும் பணியை லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement