அ.தி.மு.க.,வுடன் கூட்டணி உண்டா? பா.ஜ., தலைவர் ராமலிங்கம் 'பளீச்'

புதுச்சேரி:காங்., கூட்டணியில் நம்பிக்கையற்ற தன்மை நிலவுகிறதா என, பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர், கூறியதாவது:

துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மகாராஷ்டிரா கவர்னர் ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான விஷயம். பிரதமர் தமிழகத்தின் மீது எவ்வளவு அக்கறை காட்டுகிறார் என்பது இது நமக்கு காட்டுகிறது.

மூப்பனாருக்கு பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தபோது தமிழகத்தில் தி.மு.க., அதற்கு தடையை ஏற்படுத்தியது போல், தற்போது எவ்வித பாகுபாடும் பார்க்காமல் இருக்க வேண்டும்.

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கிய 30 நாள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா பார்லிமெண்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு, எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனை ஏன் எதிர்க்கின்றனர் என தெரியவில்லை.

முன்னாள் முதல்வர் நாராயணசாமி, எவ்வித அரசியலும் தெரியாமல் வீர சாவர்க்கர் குறித்து தாறுமாறாக பேசி வருகிறார்.கண்ணுக்கு தெரிந்த எதிரி பா.ஜ.,- என்.ஆர்.காங்., கண்ணுக்கு தெரியாத எதிரிகளும் உள்ளனர் என நாராயணசாமி கூறியுள்ளார். அவர்கள் கட்சியிலேயே எதிரிகள் உள்ளனரா அல்லது கூட்டணி கட்சிக்குள் நம்பிக்கையற்ற தன்மை உள்ளதா என்பது தெரியவில்லை. அவருக்கு அவருடைய கட்சியின் மீதே சந்தேகம் உள்ளது.

வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். புதுச்சேரியில் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி இல்லை என திட்டமிட்டு பரப்புகின்றனர். பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணி என்பது உண்டு. சீட்டு பங்கீடு குறித்து எங்கள் தேசிய தலைமை, அ.தி.மு.க.,வுடன் பேசி முடிவு செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது, மாநில செய்தி தொடர்பாளர்அருள்முருகன் உடனிருந்தனர்.

@block_B@

முதல்வர் டில்லி செல்லனும்

பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம் கூறுகையில், 'அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா குறித்து முதல்வரிடம் பேசி விரைவில் கிடைக்க ஆவணம் செய்யப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்பது அனைவரின் ஆசை. அதனை முதல்வர் டில்லி சென்று கேட்டால் தருவார்கள்' என்றார்.block_B

Advertisement