ஸ்ரீரங்கத்தில் பெருமாள் திருவடி சேவை துவக்கம்

திருச்சி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், நேற்று மாலை முதல், மூலவர் பெரிய பெருமாள் திருவடி சேவை துவங்கி உள்ளது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், கடந்த மாதம் 7ம் தேதி, மூலவர் பெரிய பெருமாளுக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்று, தைலக்காப்பு சாற்றப்பட்டது. அதனால், கடந்த 48 நாட்களாக மூலவர் பெருமாளின் திருமுகத்தை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மூலவர் பெருமாளுக்கு சாற்றப்பட்ட தைலக்காப்பு உலர்ந்து விட்டபடியால், நேற்று மாலை 3:30 மணி முதல் மூலவர் பெரிய பெருமாளின் திருமுகம் மற்றும் திருவடிகள் தரிசனம் செய்யப்பட்டு வருகிறது.

Advertisement