தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
தென் கொரியாவை சேர்ந்த ஹாசங் நிறுவனம், தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய் முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலையை அமைக்க உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், துாத்துக்குடியில் சமீபத்தில் நடந்த மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் கையெழுத்தானது.
முதல்வர் ஸ்டாலினை, ஹாசங் புட்வியர் குழும நிறுவனத்தின் முதன்மை செயலர் அலுவலர் கே.ஒய்.லீ, காலணி பிரிவு முதன்மை செயல் அலுவலர் பாப் ஷரோக் ஆகியோர், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சர் ராஜா, தலைமை செயலர் முருகானந்தம் உடனிருந்தனர்.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டானில் ஹாசங் நிறுவனம் ஆலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கு நிலம் வழங்குவது தொடர்பாக பேச்சு நடத்தப்பட்டது' என்றார். இந்நிறுவனம் அமைந்ததும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும்
-
அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்புவது ஆக.,25 முதல் நிறுத்தம்: இந்தியா போஸ்ட்
-
ஆட்டோ மீது கனரக வாகனம் மோதியது: பீஹாரில் 8 பேர் பலி
-
பரமக்குடி அருகே மின்னல் தாக்கி அக்கா, தங்கை பலி
-
7 பதக்கம் வென்றது இந்தியா * உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில்...
-
இஸ்ரேலுக்கு எதிரான தடை விவகாரம்: நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் ராஜினாமா
-
சட்டவிரோத சூதாட்டம்; கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ கைது: ரூ. 12 கோடி பறிமுதல்