கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி

2

பாலக்காடு: பாலக்காடு அருகே, கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் உயிரிழந்தார்.

கேரள மாநிலம், பாலக்காடு, கல்லேக்குளங்கரை பகுதியை சேர்ந்த பிளம்பர் சுஜீந்திரன், 53. இவர் நேற்று காலை ரயில்வே காலனி உம்மினி பகுதியிலுள்ள தனியார் ஷாப்பிங் காம்ப்ளக்சில் கழிவுநீர் தொட்டியை அடைத்து, குழாய் சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்.

அப்போது, கால் தவறி கழிவுநீர் தொட்டியினுள் விழுந்தார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஹேமாம்பிகா போலீசாரும், தீயணைப்பு படையினரும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement