பஞ்சாபில் எல்பிஜி டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்து பயங்கர விபத்து; தீயில் 2 பேர் பலி

ஹோஷியார்பூர்; பஞ்சாப்பில் எல்பிஜி டேங்கர் லாரி, மற்றொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.
மண்டியாலாஅடாவில் உள்ள தொழில்நகரம் பகுதியில் இந்த விபத்து நேரிட்டது. அதிவேகமாக வந்த எல்பிஜி டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக வளைவில் திரும்பும் போது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதி திடீரென கவிழ்ந்தது. விபத்தில் லாரி தீப்பிடித்தது.
மளமளவென பற்றிய தீ, அங்கிருந்த வீடுகளுக்கும் பரவியது. இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் அலறி அடித்து பீதியில் ஓட்டம் பிடித்தனர். 15க்கும் மேற்பட்ட கடைகளுக்கு தீ பரவியது.
தகவலறிந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். கொளுந்துவிட்டு எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். சிறிது நேர போராட்டத்துக்கு பின்னர் தீயை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீ விபத்தில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். எஞ்சியவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து போலீஸ் துணை கமிஷனர் ஆஷிகா ஜெயின் கூறியதாவது:
பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி முழு விசாரணை தொடங்கப்படும். சேத மதிப்பும் கணக்கிடப்படும்.
விபத்து ஏற்பட்ட போது எல்பிஜி டேங்கர் லாரியில் எரிவாயு கசிந்து தீப்பிடித்து இருக்கலாம் என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இவ்வாறு ஆஷிகா ஜெயின் கூறினார்.
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி