அமெரிக்கா உடன் உறவு புத்துயிர் பெறுகிறது: டிரம்புக்கு புடின் பாராட்டு

வாஷிங்டன்: அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் மீண்டும் புத்துயிர் பெறுகிறது என ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.
இது குறித்து, அணுசக்தித்துறை ஊழியர்களுடனான சந்திப்பின் போது ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது: இறையாண்மையை மதிக்காமல் சில நாடுகள் இருந்து வருகின்றன. இன்று ஐரோப்பா இறையாண்மையை கொண்டிருக்கவில்லை. இது குறித்து சொல்லும் பல நாடுகள் உள்ளன. இது ரஷ்யாவிற்கு ஏற்றதல்ல. ரஷ்யா இறையாண்மையை இழந்தால், அது தற்போதைய உள்ள நிலையில் இருக்க முடியாது.
உக்ரைன் மோதல், நேட்டோ அமைப்பு விரிவாக்கம் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகள் போன்ற பிரச்னைகளால் அமெ ரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அமெரிக்கா உடனான ரஷ்யாவின் உறவுகள் தற்போது மீண்டும் புத்துயிர் பெறுகிறது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சுரங்கப்பாதை முடிவில் வெளிச்சம் இருப்பது போன்ற சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்தார்.




மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி