முதல்வரை 'அங்கிள்' என சொல்வதா? விஜய்க்கு அமைச்சர் நேரு பதிலடி
திருச்சி: ''முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த விஜயின் தராதரம் அவ்வளவு தான். நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என்று சொல்வது தரம் தாழ்ந்த செயல்,'' என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினை, 'அங்கிள்' என்று த.வெ.க. தலைவர் விஜய் பேசியது தி.மு.க.வினரை கொந்தளிக்க செய்துள்ளது. இதை சுட்டிக்காட்டி, பல அமைச்சர்களும், தி.மு.க. நிர்வாகிகளும் விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
திருச்சியில் நிருபர்கள் சந்திப்பில், அமைச்சர் நேரு கூறியதாவது:
விஜயின் தராதரம் அவ்வளவு தான். ஒரு மாநிலத்தின் முதல்வர், பெரிய கட்சி தலைவர், 40 ஆண்டு காலம் அரசியலில் இருக்கிறார்.
நேற்று அரசியலுக்கு வந்துவிட்டு, அவர் அதுமாதிரி சொல்வது எல்லாம், தரம் தாழ்ந்த விமர்சனம் செய்கிறார். மக்கள் அதுக்கு நல்ல பதில் சொல்வார்கள். நாங்களும் தேர்தலில் அதற்கு நல்ல பதில் சொல்வோம்.
அதில் எல்லாம் ஒன்றும் மாற்றமில்லை. 10 பேர், 50 பேர் கூடிவிட்டார்கள் என்பதற்காக மாநில முதல்வரை எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என்பது எவ்வாறு சரியாக இருக்கும்?
இவ்வாறு, நேரு கூறினார்.
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி