விழுப்புரத்தில் பல்லவர் கால கொற்றவை சிற்பம் ஆய்வு

விழுப்புரம்: கண்டறியப்பட்ட பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை, விழுப்புரம் அருங்காட்சியக காப்பாட்சியர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம், மொளசூர் கிராமத்தில், பல்லவர் கால கொற்றவை சிற்பம் இருந்ததை, விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் அண்மையில் கண்டறிந்தார். 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த அந்த சிற்பம், உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் அருங்காட்சியகங்கள் துறை இயக்குனர் உத்தரவில், கடலுார் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் ஜெயரத்னா, நேற்று மொளசூர் கிராமத்தில் நேரடி ஆய்வு செய்தார்.
உடனிருந்த ஆய்வாளர் செங்குட்டுவன், சிற்பத்தின் அமைப்புகள் குறித்து விளக்கினார். தொடர்ந்து, கொற்றவை சிற்பத்தின் அமைவிடம், பாதுகாப்பு, பொதுமக்கள் வழிபாடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து, காப்பாட்சியர் ஜெயரத்னா விரிவாக ஆய்வு செய்தார்.
இது தொடர்பான அறிக்கை, துறையின் இயக்குனருக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும் என்றும், அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
அப்போது, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் பழமை வாய்ந்த சிற்பங்களை, உரிய முறையில் பாதுகாக்க அரசு அருங்காட்சியகங்கள் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செங்குட்டுவன் கோரிக்கை விடுத்தார்.
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி