'தினமலர்', கே.எம்.சி.எச்., சார்பில் வரும் 26ல் 'நலம் பேசலாம்' வாங்க!
கோவை: 'தினமலர்' நாளிதழ் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை சார்பில், 'நலம் பேசுவோம்-நலமுடன் வாழ்வோம்' இணைய வழி கலந்துரையாடல் நிகழ்வு, வரும் 26ல் நடைபெறுகிறது.
நம்மை மிகவும் அச்சுறுத்தும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு சரியாக இருந்தால், பெரும்பாலான சமயங்களில், வரும் முன் தடுத்து விட முடியும். புற்றுநோய் பாதிப்பு வருமுன் காப்பது எப்படி, வந்த பின் என்ன செய்யலாம், சிகிச்சை முறை, உளவியல் ரீதியான அழுத்தங்கள், உணவு முறை, தடுப்பூசி, அறிகுறிகள் என, அனைத்து சந்தேகங்களையும் மருத்துவத்துறை வல்லுநர்களிடம் நேரடியாக கேட்டு தெளிவு பெறலாம்.
இந்த இணைய தள கலந்துரையா டல் நிகழ்வு, 'தினமலர்' நாளிதழ், கே.எம்.சி.எச்., சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கதிர்வீச்சு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சுப்ரமணியம், மருந்தியல் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் வி க்னேஷ் கந்தகுமார், ரத்த புற்றுநோய் நிபுணர் ராஜசேகர் ஆகியோர் பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.
வரும், 26ம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 முதல் மதியம் 12 மணி வ ரை இந்நிகழ்வு, www.dinamalar.com எனும் இணைய தளம் வாயிலாக நடைபெறும். முன்பதிவு செய்ய, 87549 87509 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி