போட்டி தேர்வுக்கு மாதிரி பள்ளி கோவையில் அமைக்க திட்டம்

கோவை: கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு, அகில இந்திய போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க, மாதிரி பள்ளி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நீட், ஜே.இ.இ., கிளாட் மற்றும் க்யூட் போன்ற, 23 வகையான போட்டி தேர்வுகளுக்கு அரசு பள்ளி மாணவர்களை தயார்படுத்தும் வகையில், மாதிரி பள்ளிகளுடன் இணைந்து பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக, நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு, காரமடை, சூலுார் மற்றும் காரமடை ஒன்றியங்களில் உள்ள மூன்று பள்ளிகளில் துவக்கப்பட்டுள்ளன.

மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, சூலுார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒண்டிப்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில், பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.

இவற்றின் செயல்பாடுகளை ஆய்வு செய்து, ஒன்றைத் தேர்ந்தெடுத்து, மாதிரி பள்ளியாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'போட்டித்தேர்வுக்காக அனைத்து ஒன்றியங்களிலும் மாதிரி பள்ளி உருவாக்க உள்ளோம். பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும்' என்றனர்.

Advertisement