தேர்தல் பிரசாரத்துக்கு மீண்டும் கோவை வருகிறார் இ.பி.எஸ்.,
கோவை: அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, செப்., 9 முதல் 13 வரை, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
'மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற கோஷத்தோடு, அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி, 234 தொகுதிகளிலும் பிரசார சுற்றுப்பயணத்தை, ஜூலை 7 முதல் மேற்கொண்டு வருகிறார்.
அ.தி.மு.க.,வுக்கு கோவை ராசியான மாவட்டம் என கருதுவதால், கோவையில் இருந்து அவரது பிரசார பயணம் துவங்கியது. தற்போது மூன்றாம் கட்டமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரசார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார்.
நான்காம் கட்ட சுற்றுப்பயண பட்டியலை, கட்சி தலைமை வெளியிட்டுள்ளது. இதில், 5 நாட்கள் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செப்., 9ல் தொண்டாமுத்துார், கிணத்துக்கடவு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
10ல் பொள்ளாச்சி, வால்பாறை, உடுமலை; 11ல் மடத்துக்குளம், தாராபுரம், காங்கயம், 12ல் திருப்பூர் வடக்கு, தெற்கு மற்றும் பல்லடம்; 13ல் சிங்காநல்லுார், சூலுார், அவிநாசி தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார். 14 தொகுதிகளில் பிரசாரம் செய்யும் வகையில், பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி