ஐ.ஏ.எஸ்., அதிகாரி விருப்ப ஓய்வு
சென்னை: சென்னை ஆறுகள் சீரமைப்பு இயக்குனராக இருந்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு, திடீரென விருப்ப ஓய்வில் சென்றார்.
சென்னையில் அடையாறு, கூவம், பகிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட ஆறுகளை, மறுசீரமைப்பு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர ரத்னு செயல்பட்டு வந்தார். இவர் திடீரென விருப்ப ஓய்வு பெற்றுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்த ராஜேந்திர ரத்னு, கடந்த 2001ம்ஆண்டு ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்று, தமிழகத்தில் பணியில் சேர்ந்தார். இங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றினார். இவர் ஓய்வு பெற, இன்னும் ஐந்து ஆண்டுகள் உள்ளன. இந்நிலையில், அவர் திடீரென விருப்ப ஓய்வில் சென்றது, அதிகாரிகள் வட்டாரத்தில் திடீர் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருச்செந்துார் முருகன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்
-
தென்கொரிய காலணி நிறுவன அதிகாரிகள் முதல்வருடன் சந்திப்பு
-
மாநில அரசுகளுக்கு ரத்தசோகை: முதல்வர் ஸ்டாலின் வருத்தம்
-
ரூ.17 ஆயிரம் கோடி மோசடி வழக்கு: அனில் அம்பானி தொடர்புடைய இடங்களில் சிபிஐ சோதனை
-
ஆண்டுக்கு 50 ராக்கெட் ஏவும் நிலை; 5 ஆண்டுகளில் அடைய பிரதமர் மோடி இலக்கு!
-
கழிவுநீர் தொட்டியில் விழுந்து பிளம்பர் பலி
Advertisement
Advertisement