கொடிக்கம்பங்களை அகற்றும் உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி: கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்ற ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு பொது இடங்களிலும், சாலையோரங்களிலும் அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு ஒன்றை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை, அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உத்தரவிட்டு இருந்தது.
இந்த உத்தரவை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கட்சி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 25) சுப்ரீம் கோர்ட் நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.
அப்போது, கொடிக்கம்பங்களை அகற்றுமாறு ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த வழக்கு குறித்து 4 வாரம் காலத்திற்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
4 வாரத்திற்கு பிறகு, இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும். அப்போது நீதிபதிகள் விரிவான விசாரணை நடத்தி, ஐகோர்ட் மதுரைக்கிளை பிறப்பித்துள்ள தடை குறித்து தீர்ப்பு அளிப்பர்.










மேலும்
-
பள்ளி ஆசிரியர் நியமன மோசடி: மேற்கு வங்கத்தில் திரிணமுல் எம்எல்ஏ கைது
-
காமன்வெல்த் பளு தூக்குதல்; தங்கம் வென்று மீராபாய் சானு அசத்தல்
-
ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை; பாகிஸ்தானை விளாசிய ராஜ்நாத் சிங்
-
வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
-
தேசிய நல்லாசிரியர் விருது; தமிழக ஆசிரியர்கள் இருவர் தேர்வு
-
பிஜியின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த உதவிக்கரம்: அறிவித்தார் பிரதமர் மோடி