வரலாற்றில் முதல்முறை; ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

புதுடில்லி: ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாளை 26ம் தேதி இந்திய கடற்படையில் இணைக்கப்பட இருக்கிறது. இந்திய பாதுகாப்புத்துறை வரலாற்றில் ஒரே நாளில் இரு போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுவது முதல்முறையாகும்.
ஐஎன்எஸ் உதயகிரி மற்றும் ஐஎன்எஸ் ஹிம்கிரி ஆகிய இரு போர் கப்பல்களும் திட்டம் 17 ஆல்பா (P-17A)ன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க உள்நாட்டு அதிநவீன ரகசிய தொழில்நுட்பத்துடன் இந்த கப்பல்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நாளை விசாகப்பட்டினத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் ஐஎன்எஸ் உதயகிரி, ஐஎன்எஸ் ஹிம்கிரி போர்க்கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட இருக்கிறது. இரு அதிநவீன போர்க்கப்பல்கள் ஒரே நேரத்தில் நாட்டுக்கு அர்ப்பணிப்பது இதுவே முதல் முறையாகும். இந்தக் கப்பல்கள், முந்தைய ஷிவாலிக் ரக போர்க்கப்பல்களை விட 5 சதவீதம் பெரியவை. டீசல் இயந்திரங்கள் மற்றும் கேஸ் டர்பைன்களைப் பயன்படுத்தி இயக்கப்பட இருக்கின்றன. 76 மிமீ எம்ஆர் துப்பாக்கி, 30 மற்றும் 12.7 மிமீ ஆயுத கட்டமைப்புகள் என பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேச நாடுகளில் சீனாவின் வளர்ந்து கடல் விரிவாக்கம் இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறி வரும் நிலையில், இந்த இரு கப்பல்களும் இந்திய கடற்படைக்கு வலுசேர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், கடல் வர்த்தக பாதைகளை பாதுகாப்பது மற்றும் மலாக்கா நீரிணையில் இருந்து ஆப்பிரிக்கா வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் இருப்பை நிலைநிறுத்துவதே நோக்கம் என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.







மேலும்
-
ஒலிம்பிக் நடத்தும் நாடாக இந்தியா மாறியுள்ளது; கே.ஆர்.எஸ்., பள்ளி விழாவில் அண்ணாமலை பெருமிதம்
-
ரேஷன் கார்டில் மது பாட்டில் படம்
-
மும்பையில் அக்., 27 - 31 வரை இந்திய கடல்சார் உச்சி மாநாடு: ரூ.10 லட்சம் கோடி முதலீடு ஈர்க்க இலக்கு
-
'அமெரிக்க வரி பாதிப்பை பொறுத்து நடவடிக்கை'
-
ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை முதல் காலாண்டில் ரூ. 53,000 கோடி
-
கச்சா எண்ணெய் இறக்குமதி 18 மாதங்களில் இல்லாத சரிவு