ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை; பாகிஸ்தானை விளாசிய ராஜ்நாத் சிங்

8

புதுடில்லி: "நாங்கள் மதத்தின் அடிப்படையில் கொல்லவில்லை, செயல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்தினோம். ஜாதி, மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை" என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


ராஜஸ்தானின் ஜோத்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் பேசியதாவது: பயங்கரவாதிகள் பெயர் மற்றும் மதத்தைக் கேட்டு மக்களைக் கொன்றனர், ஆனால் நமது வீரர்கள் மதத்தின் அடிப்படையில் பயங்கரவாதிகளைக் கொல்லவில்லை. மாறாக நமது வீரர்கள் அவர்களின் செயலுக்காக கொலை செய்தனர். உலகம் முழுவதும் ஒரு குடும்பம் என்ற கருத்தை இந்தியா நம்புகிறது. ஜாதி மற்றும் மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதில்லை.

துல்லியமாக...!



ஆப்பரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானுக்கு நமது படைகள் தகுந்த பதிலடி கொடுத்தன , மேலும் தீர்மானிக்கப்பட்ட சரியான இலக்குகளை துல்லியமாக தாக்கின. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய பல இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

ராணுவ நடவடிக்கை




ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கை வெறும் ராணுவ நடவடிக்கை மட்டுமல்ல, அமைதியைப் பாதுகாப்பதற்கும், இழந்த உயிர்களை கவுரவிப்பதற்கும் ஒரு வாக்குறுதி.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement