ரியல் எஸ்டேட் சொத்துகள் விற்பனை முதல் காலாண்டில் ரூ. 53,000 கோடி

புதுடில்லி: பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 28 இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கடந்த ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 53,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன. இதில் பெரும்பாலானவை வீடுகள். இதுதவிர, குறிப்பிட்ட சில நில விற்பனையும் அடங்கும்.

இந்நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கையின்படி, கடந்த ஜூன் காலாண்டில் மொத்தம் 52,842 கோடி ரூபாய் மதிப்பிலான ரியல் எஸ்டேட் சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
Latest Tamil News
பெங்களூருவைச் சேர்ந்த 'பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ்' நிறுவனம் 12,126 கோடி ரூபாய் விற்பனை மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது.

விற்பனை மதிப்பின் அடிப்படையில் டாப் 5 இடங்களில் உள்ள நிறுவனங்கள், மொத்த விற்பனையில் 71 சதவீதம் பங்கு வகிக்கின்றன.

Advertisement