ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு: நம்பிக்கையுடன் சொல்கிறார் அன்புமணி

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் பீஹாரிலிருந்து திரும்பியதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவு பிறப்பிப்பாா் என்று பாமக தலைவர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் பீஹார் மாநிலம் சென்றுள்ளார்.புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிஹாரின் புத்த கயாவில் தான் இருந்தது.
அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், ராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிஹார் தான்.
இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பீஹார் தான்.
அத்தகைய சிறப்பு மிக்க பீஹார் மண் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம்.
சென்னை திரும்பியதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.
இவ்வாறு அன்புமணி அறிக்கையில் கூறியுள்ளார்.
மேலும்
-
வரதட்சணை கொடுமையால் 2022ல் மட்டும் 6 ஆயிரம் பெண்கள் உயிரிழப்பு!
-
வாரிசு அரசியல்: முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்!
-
செப்.9ல் ஆப்பிள் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகம்; வெளியானது அறிவிப்பு
-
இந்தியாவில் 'காமன்வெல்த் 2030' போட்டி நடத்த முன்மொழிவு; மத்திய அமைச்சரவை ஒப்புதல்
-
ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்; இந்திய வீரர் அனிஷ் வெள்ளி வென்றார்
-
வரிவிதிப்பு விவகாரத்தால் அமெரிக்காவுக்கு குட்பை; 40 நாடுகளுடன் இந்தியா பேச்சு