வாரிசு அரசியல்: முதல்வர் ஸ்டாலின், ராகுல், தேஜஸ்வி படத்தை வெளியிட்டு அண்ணாமலை கிண்டல்!

60


சென்னை: வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில் பீஹாரில் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி பங்கேற்ற படத்தை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


பீஹார் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில்குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜ சதி செய்வதாகவும், அதற்கு தேர்தல் கமிஷன் துணைபோவதாகவும் குற்றம்சாட்டி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், பீஹாரில் கடந்த 17ம் தேதி முதல் பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில் பங்கேற்க வரும்படி ஸ்டாலினை ராகுல் அழைத்தார். அதன்படி, தனி விமானத்தில் பீகார் சென்ற ஸ்டாலின், முசாபர்பூரில் நடந்த ராகுல் யாத்திரையில் பங்கேற்று பேசினார்
இதையொட்டி, அண்ணாமலை ஒரு வீடியோவை வெளியிட்டு, கருத்து பதிவிட்டுள்ளார். ஹிந்தி பேசும் இளைஞர்களை தமிழகத்துக்கு வேலைக்கு அழைத்து வந்து பாஜவை வளர்க்க பார்க்கிறார்கள்; ஹிந்தி படிச்சா கக்கூஸ் தான் கழுவணும்; பான் பராக்தான் விக்கிறானுங்க; வடமாநிலத்து காரனுங்களுக்கு அறிவே இல்லை; எல்லாரும் முட்டாள்கள் என ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் பேசிய அவதூறு பேச்சுக்கள் மற்றும் பதிவுகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று பீஹாரில் இருக்கிறார். நமது பீஹாரி சகோதர சகோதரிகளைப் பற்றி ஸ்டாலின், அவரது கட்சி தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கூறிய அநாகரிகமான கருத்துகளின் எவர்கிரீன் வீடியோ தொகுப்பை இணைத்துள்ளேன்.


ராகுலுடன் ஸ்டாலின் ஒரே மேடையில் பேசும்போது, அவரும் அவரது கட்சி தலைவர்களும்
பீஹார் மக்களை பற்றி பேசிய இழிவான கேலி பேச்சுக்களை அம்மாநில மக்கள் முன்னிலையில்
பெருமையுடன் மீண்டும் கூறுவார் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

ஒரே படத்தில்...!




வாரிசு அரசியலை கிண்டல் செய்யும் வகையில் பீஹாரில் ராகுலின் நடைபயணத்தில் முதல்வர் ஸ்டாலின், தேஜஸ்வி யாதவ் பங்கேற்ற படத்தை தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

Advertisement