வரிவிதிப்பு விவகாரத்தால் அமெரிக்காவுக்கு குட்பை; 40 நாடுகளுடன் இந்தியா பேச்சு

27

புதுடில்லி: 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்துள்ள நிலையில், ரஷ்யா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட 40 நாடுகளுக்கு டெக்ஸ்டைல் பொருட்களின் ஏற்றுமதியை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.


ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்தியாவுக்கு 50 சதவீதம் வரியை அமெரிக்கா விதித்தது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரிச்சுமை ஏற்பட்டுள்ளது. இது வர்த்தகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு டெக்ஸ்டைல் பொருட்களே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.


இந்த நிலையில், வரிவிதிப்பு காரணமாக இந்திய வர்த்தகர்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில், ரஷ்யா, பிரிட்டன் உள்பட பிற 40 நாடுகளுடன் டெக்ஸ்டைல் ஏற்றுமதியை விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


ஜப்பான், தென்கொரியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நெதர்லாந்து, போலந்து, கனடா, மெக்சிகோ, பெல்ஜியம், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.

தரம், நிலைத்தன்மை மற்றும் புதுமையுடன் இந்திய தயாரிப்பு டெக்ஸ்டைல் பொருட்கள் இருக்கும் என்ற உறுதியுடன் 40 நாடுகளுடன் தூதரகம் வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக டில்லி வட்டாரங்கள் கூறுகின்றன.

Advertisement