ஹூண்டாய் காரில் கோளாறு: விளம்பரப்படுத்திய ஷாருக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு

6

புதுடில்லி: ஹூண்டாய் காருக்கு விளம்பரம் செய்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நடிகை தீபிகா படுகோனே ஆகியோருக்கு சட்ட சிக்கல் எழுந்துள்ளது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.


ஹூண்டாய் கார் வாங்கிய ராஜஸ்தானை மாநிலத்தை சேர்ந்த கீர்த்தி சிங் என்ற பெண் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் வாங்கிய ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளாக கூறி அவர் தொடர்ந்த வழக்கில், ஹூண்டாய் நிறுவனம் மற்றும் அந்த காரை விளம்பரப்படுத்திய ஷாருக் கான், தீபிகா படுகோன் மீது எப்ஐஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. பரத்பூர் குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், போலீசார் எப்ஐஆர் பதிவு செய்தனர்.

வழக்கு பின்னணி இதோ!




கீர்த்தி சிங் 2022ம் ஆண்டு ஹூண்டாய் அல்காசர் காரை ரூ.24 லட்சத்திற்கு வாங்கி உள்ளார். இந்த கார் சிறந்தது. மிகவும் பாதுகாப்பானது என்று ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே விளம்பரத்தில் கூறியதை பார்த்து வாங்கியதாகவும், கார் வாங்கிய 6 முதல் 7 மாதங்களில் காரில் பல பிரச்னைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

விளம்பரத்தால் வந்த வினை!



ஹூண்டாய் கார் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர்களாக ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement