உலக விளையாட்டு செய்திகள்

துருக்கி 'ஹாட்ரிக்'
பாங்காக்: தாய்லாந்தில் நடக்கும் பெண்களுக்கான உலக வாலிபால் சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் துருக்கி அணி 3-0 என கனடாவை வீழ்த்தியது. ஏற்கனவே ஸ்பெயின், பல்கேரியாவை வீழ்த்திய துருக்கி, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் மெக்சிகோ அணி 3-2 என, கொலம்பியாவை தோற்கடித்தது.
காலிறுதியில் பிரான்ஸ்
ஜியாங்மென்: சீனாவில் நடக்கும் உலக வாலிபால் சாம்பியன்ஷிப் (21 வயது) 'ரவுண்டு-16' போட்டியில் பிரான்ஸ் அணி 3-0 என, கஜகஸ்தானை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் அமெரிக்க அணி 3-0 என, பல்கேரியாவை வென்றது. அர்ஜென்டினா 1-3 என ஈரானிடம் தோல்வியடைந்தது.
லிவர்பூல் அபாரம்
லண்டன்: இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் நியூகேசில் யுனைடெட், லிவர்பூல் அணிகள் மோதின. இதில் லிவர்பூல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது. இதுவரை விளையாடிய 2 போட்டியிலும் வென்ற லிவர்பூல் அணி (6 புள்ளி) 2வது இடத்தில் உள்ளது.
ரக்பி வீரர் மரணம்
வெலிங்டன்: பல்வேறு மூளை அதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட நியூசிலாந்து ரக்பி வீரர் ஷேன் கிறிஸ்டி 39, மரணமடைந்தார். உள்ளூர் மீடியாவில் வெளியான செய்தியில் இவர், தற்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இவர், தனது மூளையை நியூசிலாந்து விளையாட்டு மனித மூளை வங்கிக்கு தானம் செய்துள்ளார்.
எக்ஸ்டிராஸ்
* டில்லியில் நடக்கவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் (செப். 27 - அக். 5) துவக்க விழா அணிவகுப்பில், இந்திய மூவர்ணக் கொடியை தரம்பிர் ('கிளப் த்ரோ'), பிரீத்தி பால் (100, 200 மீ., ஓட்டம்) ஏந்தி வரவுள்ளனர்.
* ஆமதாபாத்தில், வரும் 2030ல் காமன்வெல்த் விளையாட்டு போட்டியை நடத்துவதற்காக விண்ணப்பிக்க, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கான கடைசி நாள் ஆக. 31. இதற்கு முன் 2010ல் டில்லியில், காமன்வெல்த் விளையாட்டு நடந்தது.
* ஆசிய கோப்பை ஹாக்கி தொடரில் (ஆக. 29 - செப். 7) பங்கேற்பதற்காக கஜகஸ்தான், சீனதைபே, வங்கதேச அணியினர் பீஹார் வந்தனர். இதில் கஜகஸ்தான் அணி, 1994க்கு பின் ஆசிய கோப்பையில் விளையாட உள்ளது.
* வில்வித்தை பிரிமியர் லீக் முதல் சீசன் வரும் அக். 2-12ல் டில்லியில் நடக்கும் என, இந்திய வில்வித்தை சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான லோகோ அறிமுகம் செய்யப்பட்டது.
* பெங்களூருவில் இன்று துவங்கும் துலீப் டிராபி கிரிக்கெட் காலிறுதியில் வடக்கு - கிழக்கு, மத்திய - வடகிழக்கு மண்டல அணிகள் விளையாடுகின்றன.
மேலும்
-
அமெரிக்காவின் 50 சதவீத வரி உயர்வு: 4 வாரத்துக்குள் சுமுக தீர்வு!
-
இந்தியாவுடன் சிறந்த ஒருங்கிணைந்த சட்ட நடவடிக்கை; அமெரிக்கா புகழாரம்
-
காசு என்னங்க பெரிய காசு; அமெரிக்க யூடியூபரிடம் டிப்ஸ் வாங்க மறுத்த இந்திய டிரைவர்; வீடியோ வைரல்!
-
டைமண்ட் லீக் பைனலில் நீரஜ் சோப்ரா: எப்போது எப்படி பார்க்கலாம்?
-
சிவப்பு இறைச்சியில் அதிர்ச்சி ஆபத்து
-
நீரின்றி அமையாது உடல் நலம்