டைமண்ட் லீக் பைனலில் நீரஜ் சோப்ரா: எப்போது எப்படி பார்க்கலாம்?

சூரிச்: டைமண்ட் லீக் பைனலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா இன்று களம் காண்கிறார். அவருக்கு கடும் சவால் காத்திருக்கிறது.


டைமண்ட் லீக் போட்டிக்கான பைனல் ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் இன்று(ஆக., 28) நடக்கிறது. இதில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா, இன்று களம் காண்கிறார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான அவர், இரண்டு ஒலிம்பிக் பதக்கங்களை(2021- தங்கம், 2024- வெள்ளி) வென்றுள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடும் சவால்:



ஜூலியன் வேபர் (ஜெர்மனி), ஆண்டர்சன் பிடர்ஸ் (கிரெனடா), கெஷோர் வால்கட் (ட்ரினிடாட் & டொபாகோ), ஜூலியஸ் யெகோ (கென்யா), ஆண்ட்ரியன் மார்டாரே (மால்டோவா), சுவிட்சர்லாந்தின் சைமன் விலேண்ட் ஆகியோர் நீரஜ் சோப்ரவுக்கு கடும் சவால் அளிக்க காத்துள்ளனர்.

90 மீட்டர் இலக்கு:



சமீபத்தில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் எறிந்து, தனது சிறந்த நிலையை எட்டினார். இன்றும் 90 மீட்டர் இலக்கு நிர்ணயித்து உள்ளதாக, செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

நேரம் : இந்திய நேரப்படி இன்று இரவு 11:15 மணிக்கு..

இந்தியாவில் நேரடி ஒளிபரப்பு இல்லை. Wanda Diamond League யூடியூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

Advertisement